TV Actress VJ Chitra & Hemanth (Photo Credit: @aishu_dil / @mahajournalist X)

ஜூலை 10, சென்னை (Cinema News): சென்னையை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chitra). இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores) நெடுந்தொடரில் நடித்து பெரிதளவு தமிழக மக்களால் கவனிக்கப்பட்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு இவருக்கு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சியிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அவர் நசரத்பேட்டை பகுதியில் உள்ள விடுதியில், 09 டிசம்பர் 2020 அன்று மர்மமான வகையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்ததாக ஹேம்நாத் (Hemnath) கூறினார். ஆனால், சித்ராவின் பெற்றோர் ஹேம்நாத் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து இருந்தனர். Vijay's 'GOAT' To Have An IMAX Release: ஐமேக்ஸில் பிரம்மாண்டமாக வெளிவரும் தளபதியின் கோட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்..! 

ஹேம்நாத் நிரபராதி - நீதிமன்றம்:

சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு அன்று பெரும் துயரத்தை சின்னத்திரையுலகினரிடையே ஏற்படுத்தியது. மேலும், சித்ராவின் எதிர்கால கணவர் ஹேம்நாத் நடிகையை கொலை செய்து நாடகம் ஆடி வருவதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் காவல் நிலாயத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகை சித்ரா வழக்கில், அவரின் கணவரான ஹேமந்த் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்த தகவலின் ஆதாரங்கள் ஏதும் காவல்துறையினர் சார்பில் சமர்பிக்கப்படவில்லை என்பதால், வழக்கில் ஹேமந்தை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.