ஏப்ரல் 22, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். Maldives Elections: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தல்.. மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி..!

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது. அதன்படி தலைவர் 171 படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் மாஸ் காட்டும் உழைப்பாளி ரஜினியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.