ஏப்ரல் 26, சென்னை (Cinema News): சந்தானம் (Santhanam) நடித்து சமீபத்தில் வெளியான 80ஸ் ஸ்டைல் காமெடி படம் வடக்குப்பட்டி ராமசாமி மிகப்பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து ஹாரர் மற்றும் காமெடி என் இரு ஜானர்களிலும் சந்தானம் நடித்து வரும் படங்கள் கலக்கி வருகின்றன. இப்படியான நிலையில் தனது வரிசையில் அடுத்ததாகவும் காமெடியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்துள்ளார் நடிகர் சந்தானம்.

இங்க நான் தான் கிங்கு: சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘இங்க நான் தான் கிங்கு’ (Inga Naan Thaan Kingu) என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனீஸ் காந்த், மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரித்திருக்கிறார். Cauvery Calling Movement: "சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம்.." காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர்கள் சந்திப்பு..!

இப்படத்தின் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடியில் அசத்தும் இந்த டிரெய்லர் தான் தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.