Gladiator (Photo Credit: YouTube)

ஜூலை 10, சென்னை (Cinema News): ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கிளாடியேட்டர் (Gladiator). இந்தப் படமானது வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பல வரலாற்றுப் போர்க்களக் காட்சிகளும் பழிவாங்குதலும் அதிகார யுத்தமும் இருக்கும். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலகெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. Israel Hamas War: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்.. பசியால் இறக்கும் குழந்தைகள்..!

இந்நிலையில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் ரிட்லி ஸ்காட் உருவாக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தினை போன்றே இதிலும் அதிகார யுத்தம், வரலாற்றுப் போர்க்களக் காட்சிகள், பழிவாங்குதல் என அனைத்தும் அடங்கி இருப்பது ட்ரைலர் மூலமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இப்படம் வரும் நவம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.