ஏப்ரல் 16, காபூல் (World News): உலகம் முழுவதும் நிலநடுக்கம், வறட்சி என பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கி வருகின்றனர். இயற்கை சீற்றங்கள் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் போரினால் பல நாடுகள் அவதிப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தாலிபான் பிடியில் சிக்கி ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக தவித்து வருகின்றது. சர்வாதிகார ஆட்சியினில் நாட்டின் வளர்ச்சி ஆனது முடங்கிப் போய் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பருவமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்கு பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்துள்ளனர். Postal Ballot: மக்களவைத் தேர்தல்.. தபால் வாக்கிற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!
இந்த வெள்ளத்தால் தலைநகர் காபூல் (Kabul) மற்றும் நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.