ஜனவரி 24, சென்னை (Cinema News): சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் மொக்கையாக இருந்தாலும் அதை கொண்டாடுவது வழக்கம் தான். புது முகங்கள் அல்லது வளர்ந்து வரும் ஹீரோக்களில் படங்கள் அவர்களை கவர்ந்தால் மட்டுமே பேசப்படும் நல்ல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ரசிகர்களிடம் அங்கிகாரம் கிடைப்பதில்லை. அது போல பல தமிழ் ஹீரோக்கள் நல்ல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும் ரசிகர்களால் கொண்டாட்டப்படுவதில்லை.
அசோக் செல்வன் (Ashok Selvan)
படங்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக இருக்கிறார் அசோக் செல்வன். இவரின் படங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்தாலும் இவரின் திறமைக்கு ஏற்ற அங்கிகாரம் சற்று குறைவாகத் தான் கிடைக்கிறது. தமிழ் பையனான அஷோக் செல்வன், சூது கவ்வும் போன்ற பெரிய படங்களில், சிறிய ரோல்களில் நடித்து வந்தவர் தெகிடி திரைப்படத்தின் காதல் நாயகனாக நடித்தார். வெற்றி தோல்வி படங்களையும் கொடுத்த வந்தார். ஓ மை கடவுளே, வேழம், சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, நித்தம் ஒரு வானம், போன்ற வெற்றிப் படங்களும் வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார். Oscars Nomination 2025: இந்திய திரை ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. இந்தியப்படம் இடம்பெறாத ஆஸ்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சித்தார்த் (Siddharth)
தமிழ் சினிமாவில் 18 வருடங்களாக இருக்கும் சித்தார் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர் இன்னும் ஒரு சில இடங்களில் முன்னனி ஹீரோவாக அங்கிகரிக்கப்படாமல் இருக்கிறார். தமிழ், தெலுங்கில் படங்களில் நடித்து வரும் சித்தார் . பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா படங்கள் சித்தார்த்தின் முக்கிய படங்களாக இருக்கிறது.
பாபி சிம்ஹா (Bobby Simha)
10 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் இருக்கும் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், வில்லனாகவும் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல படங்களில் இவரின் நடிப்பு வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. ஜிகர்ந்தண்டா, இறைவி, பீட்சா 2, பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கான தனி அடையாளம் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
சாந்தனு பாக்கியராஜ் (Shanthanu Bhagyaraj)
நடிகர் பாக்கியராஜின் மகனான நடிகர் சாந்தனு பாக்கியராஜ் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினாலும் அவருக்கு சினிமா துறையில் தகுந்த இடம் கிடைக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான இராவண கோட்டம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இப்படம் பிர காரணங்களால் ஃபிளாப் தான் ஆனது. இது போலவே பல படங்களில் தோல்வியை தழுவுகிறார். Thalapathy 69: தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்.!
விக்ரம் பிரபு (Vikram Prabu)
தனது முதல் படத்திலேயே அனைவரையும் ஈர்த்தார் விக்ரம் பிரபு. இவர் தேர்வு செய்யும் கதைகள் தனித்துவமாக இருப்பதால் விமர்சன ரீதியிலாவது வெற்றியைக் கண்டுவிடுகிறது. காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து வகைப்படங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி விடுவார். தமிழ் சினிமாவின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் சிறிய ரோலாக இருந்தாலும் அதை துணிந்து நடித்திருந்தார் விக்ரம் பிரபு. மேலும் இவரின் டாணாக்காரன் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது இருப்பினும் இவருக்கான கொண்டாட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.
ஆதி (Aadhi)
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகரான ஆதி தனது முதல் தமிழ் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது போல தன் திறமையால் பல வெற்றிப் படங்களை அளித்திருந்தாலும் இவரும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட மறந்த பட்டியலிலேயே இருக்கிறார்.
இது போலவே விஷ்ணு விஷால், சிபிராஜ், விதார்த், மாஸ்டர் மஹேந்திரன், அதர்வா என பலரும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள் பட்டியலில் இருக்கின்றனர்.