Mari Selvaraj (Photo Credit: Facebook)

மார்ச் 12, சென்னை (Cinema News): இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் தனது முதல் படமான பரியேறும் பெருமாள், மூலம் தென்னிந்திய சினிமாவில் தனது கால்தடத்தை பதித்தவர். மேலும், சமூக கருத்துகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் என பேசிய திரைப்படம் ஆகும். மக்கள் அனைவரிடத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. Worker Murder: நண்பரை மதுபாட்டில் கொண்டு அடித்துக்கொன்ற பயங்கரம் – குடிபோதையில் நேர்ந்த சோகம்..!

தற்போது, இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்திற்கான படபிடிப்பை தொடங்கியுள்ளார். பா.ரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படமாகும். கதாநாயகனாக துருவ் விக்ரம் மற்றும் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.

மேலும், துருவ் விக்ரம் கபடி வீரராகவும், மணத்தி கணேசனின் வாழ்க்கையை கதையின் மைய கருவாக வைத்து உருவாகிறது. இவர் நீண்ட நாட்களாக தீவிர கபடி பயிற்சிப் பெற்று வந்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கென பல்வேறு கபடி போட்டிகளையும், மாநில அளவிலான கபடி போட்டிகளையும் நேரில் சென்று பார்த்துள்ளார். தற்போது, இயக்குனர் மாரி செல்வராஜ் அதற்கான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.