DQ40 Title (Photo Credit: @dulQuer X)

மார்ச் 01, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் துல்கர் சல்மான் (Dulquer Salmaan)-க்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ரசிகர்கள் ஏராளம். தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் ஆகிய படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம், தெலுங்கில் தயாராகி பிற மொழிகளில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தமிழில் காந்தா என்ற படத்தை தறித்து நடிக்கவுள்ளார். Good Bad Ugly Teaser: "பண்ணக்கூடாத விஷயத்தெல்லாம் பண்ணனும் பேபி"... மிரட்டி விட்டிங்க போங்க.. அது.. குட் பேட் அக்லீ படத்தின் டீசர் இதோ.! 

5 மொழிகளில் வெளியாகும் திரைப்படம்:

இந்நிலையில், துல்கர் சல்மானின் 40 வது படம் தொடர்பான முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, துல்கரின் 40 (DQ 40) வது படத்திற்கு ஐ'ம் கேம் (I'M GAME) என பெயரிடப்பட்டுள்ளது. வாய்பெரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் படத்தை, நகாஸ் ஹிதாயத் இயக்கி வழங்குகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது.

துல்கர் சல்மானின் புதிய படம் தலைப்பு அறிவிப்பு: