ஜனவரி 02, மும்பை (Mumbai): இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகராகவும், தொலைக்காட்சியில் நடித்த புகழ் பெற்ற மூத்த நடிகராகவும் இருப்பவர் ராகேஷ் பேடி (வயது 69). இவருக்கு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை ஆதித்யகுமார் என்றும், இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் அறிமுகம் செய்திருக்கிறார். அவர் தனக்கு சொந்தமான ரூபாய் 87 லட்சம் மதிப்புள்ள பிளாட்டை விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இராணுவ வீரர் என அறிமுகம்: தான் இராணுவ வீரர் என்பதை அடையாளப்படுத்த, இராணுவ சீருடையில் உள்ள புகைப்படத்தையும், இராணுவ அடையாள அட்டையும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் மர்ம நபரான ஆதித்ய குமாரின் பேச்சுக்களை நம்பிய ராகேஷ், அவருக்கு பணம் அனுப்பி ரூ.85 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். Modi Appa- PM Gets Grand Welcome In Tiruchirapalli: "பிரதமர் நரேந்திர மோடி எங்களின் அப்பா": திருச்சி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.!
ரூ.85 ஆயிரம் இழப்பு: மர்ம நபரின் பேச்சினை நம்பி ரூபாய் 85 ஆயிரம் பணத்தை கூகுள் பே வழியாக பரிமாற்றம் செய்துள்ளார். தாமதமாக தான் ஏமாற்றப்பட்டது குறித்து உண்மை அறிந்த ராகேஷ் பேடி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சில் மயங்கியதால் சோகம்: விசாரணையில், கடந்த 25 ஆம் தேதி பேடியை தொடர்பு கொண்ட நபர், மறுநாள் அழைத்து முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதனை அனுப்பி வைத்ததைத்தொடர்ந்து, 30ம் தேதிக்குள் பல காரணங்களை கூறி ரூ.25,000 மற்றும் ரூ.10,000 என ரூ.85,000 பெற்றுள்ளார். ரூ.85 ஆயிரம் பரிமாற்றம் செய்ததை தொடர்ந்து, மர்ம நபரின் அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் தான் பேதிக்கு விபரம் புரிந்துள்ளது. தற்போது மர்ம நபருக்கு காவல்துறையினர் வலைவீசி இருக்கின்றனர்.