Srikanth Drug Case / Actor Krishna (Photo Credit : @TamilCineX / @ChennaiTimesTOI X)

ஜூன் 25, சென்னை (Chennai News): போதைப்பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் வழக்கில் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீகாந்த் கொகைனுக்கு தான் எப்படி அடிமையானேன்? என வாக்குமூலம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கழுகு படத்தின் நடிகர் கிருஷ்ணா மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறினர். இதனால் கிருஷ்ணா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானதால், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பயன்பாடு :

மேலும் தனியார் நிகழ்ச்சி, திரைப்பட விழாக்களிலும் போதைப்பொருள் பயன்பாடு இருந்து வந்தது தெரியவந்ததால், இந்த வழக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் போதைப் பொருளை பயன்படுத்தும் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அதில் முன்னணி நடிகர் ஒருவர் தான் நடத்தும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கொகைன் (Cocaine) போதைப் பொருளை வழங்குவதாக கூறப்படுகிறது. Srikanth Drug Case: நடிகர் ஸ்ரீகாந்த் எந்தெந்த வழக்கின் கீழ் கைது?.. முழு விபரம் இதோ.! 

நீளும் பட்டியல் :

இதனால் அவருடன் இணைந்து நடித்த நடிகைகளும் கொகைனுக்கு அடிமையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இசையமைப்பாளர் ஒருவரும் கொகைனுக்கு அடிமையாகி, இரவில் அதனை உபயோகிக்காமல் தூங்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் கைது செய்யப்படுவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.