Tamil Actor Srikanth (Photo Credit : Instagram)

ஜூன் 24, சென்னை (Cinema News): சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பார் ஒன்றில் தகராறு நடப்பதாக நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு சம்பவத்தன்று தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நேரில் சென்று அதிகாரிகள் தகராறு செய்த நபர்களை கைது செய்தனர். அப்போது இவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பிரபல தமிழ் நடிகரான ஸ்ரீகாந்தும் (Actor Srikanth) இந்த விவகாரத்தில் சிக்கியது தெரியவந்தது.

போதைப்பொருளை சப்ளை செய்த அரசியல் கட்சி பிரமுகர் :

இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து ஸ்ரீகாந்த் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அரசியல் கட்சி பிரமுகர் பிரசாத் போதைப் பொருளை சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. Breaking: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது? 

நடிகர் ஸ்ரீகாந்த் கைது :

மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார். கொரோனா காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ரூ.5 இலட்சத்திற்கும் மேலாக பணம் உபயோகித்து கொகைன் வாங்கி பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனால் பல திரையுலக புள்ளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

இந்த நிலையில், போதை பொருள் பயன்படுத்திய புகாரின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,

1) NDPS 8C சட்டத்தின் கீழ் போதை பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோடு அதனை வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு.

2) NDPS சட்டம் 22P மிகக்குறைந்த அளவை தாண்டியும், வணிக ரீதியாக போதை பொருளை வைத்திருந்ததற்காகவும் வழக்குப்பதிவு.

3) NDPS 29(1) குற்றச்செயலில் பங்கு பெற்றவர் என்ற போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவிலும் வழக்குப்பதிவு.