Vijay Sethupathi | Jawan Still of Vijay Sethupathi (Photo Credit: Facebook / Twitter)

ஜூலை 24, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ - ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தை வெளியீட்டுக்கு தயார்படுத்தி வருகிறார். அட்லீயின் அட்டகாசமான இயக்கத்தில், நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்கோத்ரா, யோகிபாபு, ரியாஸ் கான், பிரியாமணி உட்பட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்திலும் காட்சி தருகிறார். அனிரூத் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் ஷாருக்கானின் ரெட் சில்லஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பட விநியோக பணிகளை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ரூ.220 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள ஜவான் திரைப்படம், செப்டம்பர் 7ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!

ஜவான் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. சர்வதேச அளவிலும் ஷாருக்கானின் படத்திற்கு வரவேற்பு இருப்பதால், படம் உலகெங்கும் பல நாடுகளில் பல மொழிகளிலும் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தில் விஜய் சேதுபதியின் கண்களை குறிப்பிட்டு படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது.