ஆகஸ்ட் 31, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழ் திரையுலகில் நிகழும் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படத்தை கடந்த மாதம் ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா திருமணம் :
மேலும் தங்களது திருமண கோலத்தில் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், '6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.. பேபி லோடிங் 2025..' எனவும் பதிவிட்டு இருந்தார். முன்னதாகவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வேறு பெண்ணுடன் அவர் காதல் உறவில் இருந்தது சர்ச்சையை சந்தித்தது. இதனிடையே கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் பங்கேற்று இருந்தார். இதனை அடுத்து ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என்று அறிவித்து பதிவிட்டிருந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.!
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் :
இதனிடையே நேற்று முன்தினம் ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இது குறித்த புகார் மனுவில், "சென்னையில் உள்ள கோவிலில் வைத்து மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்தார். சமீபத்தில் அவர் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியதால், அது குறித்து கேட்க தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது அவர் என்னை தாக்கினார். கோவிலில் வைத்து திருமணம் செய்து தற்போது என்னுடன் வாழ மறுக்கிறார். நான் 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ மன்றாடுகிறேன். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்" என தெரிவித்தார்.
வீடியோ அனுப்பி காதலை வளர்த்த மாதம்பட்டி ரங்கராஜ் :
இந்த நிலையில் தற்போது ஜாய் கிரிசில்டா ராஹா ரங்கராஜ் (தனது குழந்தை) அப்பாவின் அளப்பறைகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், "என்னடி பண்ற பொண்டாட்டி. மிஸ் யூ. லவ் யூ. வீட்டுக்கு போய் சாப்பிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சிருச்சு" என அவர் அன்றைய நாளில் செய்த அனைத்து வேலைகளையும் வீடியோவாக எடுத்து அனுப்பி ஜாய் கிரிசில்டாவை கொஞ்சி காதலை வளர்த்துள்ளார். இது குறித்த வீடியோவை தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்த ஜாய் கிரிசில்டா, "தன் குழந்தையை சுமக்கும் பெண்ணை ஏமாற்றும் ஒரு ஆண் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவார். இதை மீண்டும் படியுங்கள்" என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஜாய் கிரிசில்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோ :
Husband (aka) #RahaRangaraj Appa-வின் Alaparaigal 🙈 @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampatty #chefmadhampattyrangaraj
A man that can betray the woman who carried his child will betray anyone
Read that again…. pic.twitter.com/0mItPCB9Uc
— Joy Crizildaa (@joy_stylist) August 31, 2025