Bigg Boss Tamil 9 Week 1 First Elimination (Photo Credit : Instagram)

அக்டோபர் 11, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்ச்சைக்கு பெயர்போன சிலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், இந்த வாரம் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட இருக்கிறார்.

எலிமினேஷனுக்கு முன்பே வெளியேறிய போட்டியாளர்:

பிக் பாஸ் வீட்டின் விதிகளின்படி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்ற நினைக்கும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும். இந்த வாரம் நாமினேஷனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், அப்சரா, அகோரி கலையரசன் மற்றும் இயக்குனர் பிரவீன் காந்தி ஆகியோர் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகளில் கடைசி இடத்தில் அகோரி கலையரசன் மற்றும் பிரவீன் காந்தி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் இந்த எலக்ஷனில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியேறி இருக்கிறார். Bigg Boss Tamil 9: வாட்டர் மெலன் ஸ்டாரை அடிக்க கை ஓங்கிய எப்ஜெ.. பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து தாக்க முயற்சி.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்.!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நந்தினி:

அதன்படி பிக் பாஸ் போட்டியாளரான நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி (Nandhini Evicted) இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கோவையில் பிறந்து வளர்ந்த நந்தினி வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் தெரிவித்து இருந்தார். தாய், தந்தை மறைவுக்குப்பின் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும், யோகா, உடற்பயிற்சி போன்றவை உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். தனது தொகுப்பாளர் கனவு நிறைவேற, வாழ்க்கையில் முன்னேற பிக் பாஸை தேர்வு செய்தவர் இறுதியில் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே சக போட்டியாளர்களின் மீது அதிருப்தி அடைந்த நந்தினி போட்டியாளர்களிடம் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். ஒரு கட்டத்தில் அழுது கொண்டே கோபத்துடன் பேச, அவரை ஆவேசப்படுத்தும் நோக்கில் போட்டியாளர்களும் சில வார்த்தைகளை உபயோகித்ததை தொடர்ந்து நந்தினி போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸையும் விமர்சித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிருப்தி:

மேலும் உண்மையான அன்புக்கு மதிப்பில்லை. யாரும் உண்மையாக இல்லை. நான் வெளியேறுகிறேன். நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் என்னை நாமினேஷன் செய்யுங்கள். என்னை இப்போது விட்டால் கூட விஜய் சேதுபதியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுவேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அவரை மறைமுகமாக தாக்கி வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் மனநலம் தெரப்பிக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஒரு கட்டத்தில் பிக் பாஸ் அவரை கன்ஃபக்சன் ரூமுக்கு அழைத்து என்ன பிரச்சனை? என்று கேட்டபோது நிகழ்ச்சி மீதான அதிருப்தியை நந்தினி வெளிப்படுத்தினார். தொடர்ந்து என்னை விட்டால் போதும் என்று கூறவே, உங்கள் இடது புறத்தில் கதவு உள்ளது. அதிலிருந்து நீங்கள் வெளியேறலாம் என்று பிக் பாஸ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நந்தினியும் வெளியேறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நந்தினி வெளியேறி விட்டதாக கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நந்தினி வெளியேற்றப்பட்டதாக பகிரப்படும் வீடியோ:

இந்த வாரம் வெளியேறபோவது இவர் தானா?

தனிப்பட்ட காரணங்களால் அவர் வெளியேறி இருந்தாலும் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் அவரது பெயர் இல்லாததால் எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் அகோரி கலையரசன் மற்றும் பிரவீன் காந்தியில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவர் என கூறப்படுகிறது. முக்கியமாக பிரவீன் காந்தி கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் போட்டியாளர் ஒருவர் வெளியேறியதால் இந்த வாரம் நோ எவிக்ஷன் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டாரை அனைவரும் டார்கெட் செய்து விமர்சனங்களை முன்வைத்ததால் அவர் இந்த முறை அனுதாப ஓட்டால் காப்பாற்றப்பட்டு தப்பித்தார்.