Manorama Son Bhoopathi Death (Photo Credit: @onlynikil / @20101976M X)

அக்டோபர் 24, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பழம்பெரும் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஆச்சி மனோரமா (Actress Manorama). இவர் 1,000 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். திரையில் கதாநாயகியாக வலம்வந்தவர், வயது மூப்புக்குப்பின் பாட்டி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து ரசிகர்களால் ஆச்சி மனோரமா என அழைக்கப்பட்டார். குணசித்திர வேடம், நகைச்சுவை என தனக்கென தனி முத்திரையும் இவர் பதித்திருந்தார். கடந்த அக்டோபர் 2015ல் மறைந்தார். Bigg Boss Tamil 9: கேமிராவை மறந்து கொஞ்சல், சிணுங்கல்.. குறும்படம் போட்டு பிக் பாஸ் கழுவி ஊத்திய தருணம்..! 

மனோரமா மகன் பூபதி காலமானார் (Manorama’s Son Bhoopathi Passed Away):

இந்நிலையில், மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி நேற்று (அக்.23) காலை சுமார் 10:15 மணியளவில் சுவாச கோளாறு காரணமாக காலமானார். சென்னை தி. நகரில் உள்ள வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. சுமார் 70 வயதாகும் பூபதி, உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் காலமானார். மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவரை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் பூபதியின் இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் வைத்து நடைபெறுகிறது. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, ராஜராஜன், அபிராமி, மீனாட்சி என 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

மனோரமா மகன் மறைவு:

பூபதியின் உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது: