அக்டோபர் 22, சென்னை (Cinema News ): மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “லியோ” (Leo). விஜய் - லோகேஷ் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள லியோ திரைப்படம், அக்.19 அன்று உலகளவில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று, திரையில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றுள்ள லியோ திரைப்படம் வசூலையும் குவித்து வருகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்படத்தில் இளைய தளபதி விஜய், மிஸ்க்கின், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ஜியார்ஜ் மரியான், திரிஷா உட்பட பலரும் நடித்திருந்தனர். Martin Goetz Passed Away: கம்ப்யூட்டர் உலகின் புதுமைப்பித்தன், மூன்றாம் தர மென்பொருளை உருவாக்கியவர் மரணம்.!
இந்நிலையில், நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இந்திய அளவில் ரூபாய் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் திரைப்படம் ரூபாய் 140 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் ரூ.65 கோடி வசூல் செய்த லியோ திரைப்படம், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் ரூபாய் 35.25 கோடி, ரூ.40 கோடிகளை வசூல் செய்துள்ளது. மொத்தமாக சர்வதேச அளவில் லியோ திரைப்படம் ரூ.300 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.