ஜூன் 22, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜ் (Logesh Kanagaraj) இயக்கத்தில், நடிகர் விஜய் (Actor Vijay), திரிஷா, சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் வாசுதேவ் மேனன், சத்யராஜ், ஜியார்ஜ் மரியான், மன்சூர் அலிகான் உட்பட பலரின் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ (Leo).
இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார். தயாரிப்பு பணிகளை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. படம் ரூ.300 கோடி செலவில் உருவாகி வருகிறது.
நடிகர் விஜயின் பிறந்தநாளை இன்று லியோ படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது படத்தின் நான் ரெடி பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் விஜயின் அரசியல் வருகைக்கான தொடக்கத்துடன் அமைந்து பின் ரௌடிகள் கூட்டத்தில் நடக்கும் உற்சாக பாடல் போல அமைக்கப்பட்டுள்ளது.