Surya 45 Shooting at Ramoji City (Photo Credit: Instagram)

மார்ச் 02, ஹைதராபாத் (Cricket News): தமிழில் வெளியான பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து, எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம், சிங்கப்பூர் சலூன் உட்பட சில படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டவர் ஆர்ஜே பாலாஜி (RJ Balaji). வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை இயக்கியும் வழங்கியவர், தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வழங்கவுள்ளார். டிரீம் வாரியஸ் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் சூர்யா 45 (Surya 45) படத்தில், ஆர்ஜே பாலாஜி இயக்குனராக களமிறங்கியுள்ளார். DQ 40 I'M GAME: துல்கர் சல்மானின் 40 வது திரைப்படத்திற்கு ஐ'ம் கேம் என பெயர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு:

ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், கலைவாணன் எடிட்டிங்கில், ஸ்ரீ அப்யங்கர் இசையில் படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கோவை, சென்னை உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் & இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தில் சூர்யா, திரிஷா கிருஷ்ணன், ஸ்வஸ்க்கா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி சுப்பிரமணியன், சுப்ரீத் ரெட்டி, மாயா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுவதாக ஆர்ஜே பாலாஜி தகவல்:

 

View this post on Instagram

 

A post shared by RJ Balaji (@irjbalaji)