
ஜூன் 14, கோடம்பாக்கம் (Cinema News): நடிகர் தனுஷின் 3 திரைப்படம் மூலமாக திரைஉலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத் ரவிசந்தர் (Anirudh Ravichander). கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைஉலகை இசையால் மகிழ்வித்து வரும் அனிரூத் ஒருசில சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார். மேலும், ஹாலிவுட் திரைப்படங்களில் இசையை பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்து இருக்கிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் சிறிய நடிகர்கள் முதல் உச்ச நடிகர்கள் வரை பலரின் படத்திலும் அடுத்தடுத்து இசையமைப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறார். இதனால் அனிரூத்தின் இசைக்கும் ரசிகர் கூட்டம் என்பது உண்டானது.
அனிரூத் காவியா மாறன் காதலா (Anirudh Kavya Maran):
இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப்-க்கு பேட்டி கொடுத்த பயில்வான் ரங்கநாதன், இசையமைப்பாளர் அனிரூத் - காவியா மாறன் (Anirudh Kavya Maran Marriage) காதலிப்பதாக செய்திகள் வருகிறது. இருதரப்பிலும் இந்த விஷயத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல் கிடைக்கிறது" என கூறி இருந்தார். இந்த விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. காவியா மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரில் ஒருவர் ஆவார். இவர் கலாநிதி மாறனின் ஒரே மகள். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.4,000 கோடி என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராகவும் இருக்கிறார். அனிரூத்தும் புகழ், செல்வம் நிறைந்தவர். லதா ரஜினிகாந்தின் தம்பி மகன் ஆவார். இவர்களின் காதல், பிற பேச்சுவார்த்தை குறித்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை.