Joy Crizildaa: 'தர்மம் ஜெயிக்கும்' ஜாய் கிரிசில்டா பதிவு.. முற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பஞ்சாயத்து.!
பெண்களுக்கு துரோகம் இழைப்பவர்களை கடவுள் தண்டிப்பார் என ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் (Joy Crizildaa Madhampatty Rangaraj) குறித்து இன்று ட்விட் பதிவு செய்துள்ளது மீண்டும் இவ்வழக்கின் பரபரப்பை அதிகரித்து இருக்கிறது.
செப்டம்பர் 06, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலை செய்து அடையாளம் பெற்று பின் நடிகரானார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், திரையுலகில் அடியெடுத்து வைத்தபின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் லீலைகள்.. ஜாய் கிரிசில்டாவுடன் காதலை வளர்த்த வீடியோ லீக்.!
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்:
இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார். இருவரும் பழகிய நாட்களில் ரங்கராஜ் 'ஒய் பொண்டாட்டி' என அழைத்து அனுப்பிய வீடியோவையும் ஜாய் பதிவு செய்தார். Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.!
ஏமாற்றியதாக புகார், ஜாய் குமுறல்:
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா நேற்று இரவு தனது ட்விட்டர் (X) பக்கத்தில், "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார். தர்மம் ஜெயிக்கும்" என பதிவிட்டுள்ளார். மேலும், அவரது வலைப்பக்க பார்வையாளர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதை புகைப்படம் எடுத்தும் ட்விட் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், 'பெண்களை ஏமாற்றும் ஆண்கள் அனைவரும் ஓய் பொண்டாட்டி' என ஒரே பாணியில் பேசி அனுப்புகின்றனர். இதில் பாட்டு வேறு என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. தர்மம் ஜெயிக்கும் என கூறியுள்ளதால் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா? அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழவைத்துள்ளது.
ஜாய் கிரிசில்டா வலைப்பதிவு:
"பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்."
தர்மம் ஜெயிக்கும்
— Joy Crizildaa (@joy_stylist) September 5, 2025
(The above story first appeared on LatestLY on Sep 06, 2025 08:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

