Singer Chinmayi (Photo Credit: YouTube)

மே 29, சென்னை (Cinema News): ராஜ்கமல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷ்னல் (Raaj Kamal Films International), மெட்ராஸ் டாக்கிஸ் (Madras Talkies), ரெட் ஜெயிண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கமல் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. சமீபத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 'முத்த மழை' பாடல் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் பாடகி தீ இப்பாடலை பாடியுள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் பாடகி சின்மயி (Chinmayi) பாடியிருக்கிறார். Actor Rajesh Passes Away: மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

கேள்வி எழுப்பிய ரசிகர்கள்:

இசை வெளியீட்டு விழாவில், முத்த மழை பாடலை பாடகி சின்மயி பாடினார். இதனை, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 'இப்படிபட்ட குரலை ஏன் இவ்வளவு நாள் தடை செய்தீர்கள்' என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரசிகர் ஒருவர், கமல்ஹாசன் மற்றும் ஏஆர்ஆர் டேக் செய்து, "இந்த மயக்கும் குரலை தமிழ் திரையுலகில் இருந்து ஏன் தடை செய்தார்கள்? தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அவரது குரலை மட்டும் ரசிக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது, சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியாகியுள்ளது. பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, கடந்த 2018ஆம் ஆண்டு பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் ராதாரவி மீது MeToo குற்றச்சாட்டுகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, 2018 முதல் டப்பிங் யூனியனால் தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'முத்த மழை' பாடல் - சின்மயி: