Actor Rajesh Passes Away (Photo Credit: @kayaldevaraj X)

மே 29, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் (வயது 75), சென்னையில் இன்று (மே 29) காலமானார். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் 1949ஆம் ஆண்டு டிசம்பரில் 20ஆம் தேதி பிறந்தார். முதலில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர், தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார். Jr NTR & Kalyan Ram: தாத்தாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜூனியர் என்.டி.ஆர்.!

பிரபலங்கள் இரங்கல்:

1974ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் ராஜேஷின் (Actor Rajesh) உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.