
பிப்ரவரி 10, கோடம்பாக்கம் (Cinema News): ஒண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Flims) தயாரிப்பில், தனுஷ் (Dhanush) இயக்கத்தில், நடிகர்கள் பாயிஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார், மேத்திவ் தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா காடூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் சங்கர் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku Enmel Ennadi Kobam). நடிகர், பாடகர் என பல தனித்துவங்களை கொண்டு திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம்வந்த தனுஷ், 2017ல் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வழங்கி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, 2024ல் ராயன் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Salmanul To Marry Megha Mahesh: மௌனராகம் சீரியல் ஜோடி இப்போ ரியல் ஜோடி.. விஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் அறிவிப்பு.!
தனுஷின் இயக்கத்தில் 3வது திரைப்படம்:
இதனிடையே தான் 2025ம் ஆண்டில் 2 படங்கள் தனுஷின் இயக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் இட்லி கடை படத்தின் டீசர் மற்றும் பிற போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த ட்ரைலர் காட்சிகள் வாயிலாக இன்றளவில் இருக்கும் இளைஞர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு, சுவாரசியமான காதல் கதை ஒன்றை படமாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. படத்தின் இசையனைப்பு பணிகளை ஜிவி பிரகாஷும், ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோவும், எடிட்டிங்கை ஜிகே பிரசன்னாவும் மேற்கொண்டுள்ளனர். விரைவில் திரைக்கு வரும் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.