டிசம்பர் 23, மும்பை (Cinema News): பாலிவுட்டில் கலக்கி வரும் தம்பதி தான் ரன்பீர் மற்றும் ஆலியா. இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமானதாக உலகிற்கு அறிவித்தார் ஆலியா. தொடர்ந்து சிறிது நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நாட்களுக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆலியா. இருப்பினும் இவர்கள் இருவரும் தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவே இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ரன்பீர் மற்றும் ஆலியா, அவர்களது மகள் ராஹா கபூரை, ஒரு விருந்திற்கு அழைத்து சென்றுள்ளனர். Kistinka River Turned Red: தொழிற்சாலை கழிவு நச்சுக்களால் நிறம் மாறிப்போன நதி; இயற்கைக்கு மாறாக நடந்த நிகழ்வு.!
அங்கு அவர்கள் எடுத்த படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. குழந்தையை பார்த்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரல் ஆக்குவதுடன் மட்டுமல்லாமல், குழந்தை பார்ப்பதற்கு ஆலியா போன்று உள்ளது என்று கூறி வருகின்றனர். ஒரு சிலரோ கரீனா கபூரின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு, ராஹா பார்ப்பதற்கு கரீனா கபூர் போன்று உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.