Actor Kamal Haasan / Actor Ravi Chandran (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 11, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. எதிரெதிர் கட்சிகள் சித்தாந்த ரீதியிலான அரசியல் கருத்து மோதலை தொடங்கி இருக்கின்றனர். ஒருசில நேரம் இவர்களின் கருத்து மோதல் கொலை மிரட்டலாகவும் மாறுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல் ஹாசன் கல்வி நிகழ்ச்சியில் பேசியதற்கு கிளம்பிய எதிர்ப்பு கொலை மிரட்டலாக மாறியுள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை கல்வி விழா:

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை (Agaram Foundation) சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் மற்றும் மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் (Kamal Haasan) நேரில் கலந்து கொண்டார். அப்போது, கமல்ஹாசன் விழாவில் சில நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பேசுகையில், "சனாதன சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன சக்திகளை எதிர்க்கும் ஒரே ஆயுதம் கல்விதான். அந்த கல்வி மட்டும் தான் சனாதன சக்தியின் சங்கிலித்தொடரை உடைக்கும். கல்வி மட்டும் இல்லை என்றால், சனாதன சக்திகள் நம்மை அழித்துவிடும்" என்று பேசி இருந்தார். கமல் ஹாசனின் பேச்சுக்கு அரங்கம் அதிர கைதட்டல் பாராட்டாக கொடுக்கப்பட்டது. Agaram Foundation: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.! 

கமல் ஹாசன் அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய வீடியோ:

சங்கை அறுப்பேன் - சீரியல் நடிகர் பேச்சு (Pandian Stores Actor Ravi Speech):

இதனிடையே, சனாதனம் தொடர்பான பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி உட்பட வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சின்னத்திரை நடிகரும், வலதுசாரி ஆதரவாளருமான நடிகர் ரவிச்சந்திரன் (Serial Actor Ravichandran) கமல் ஹாசன் பேச்சுக்கு (Kamal Haasan Speech) கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனியார் யுடியுப் சேனலில், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இந்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை நடிகர் ரவிச்சந்திரன் முன்வைத்தார். அவர் பேசுகையில், "சனாதனம் தொடர்பாக எதிர்ப்பு பேசினால், நடிகர் கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன்" என்று ஆவேசமாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பேசுதமிழா பேசு என்ற தனியார் யூடியூப்பில் வீடியோ வைரலாகி வைரலாகியது.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்:

இதனையடுத்து, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் தற்போது விசாரணையும் நடந்து வருகிறது. கமலின் சனாதன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நடிகர் ரவிச்சந்திரன், தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மருமகள் உட்பட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். தீவிர வலதுசாரி ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், இதற்கு முன்னதாக பல்வேறு அரசியல் கருத்துக்களையும் யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால், கமலுக்கு எதிராக பேசியது சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

வீடியோ நீக்கப்பட்டது:

சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் மீது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்த புகாரில், வீடியோவை பரப்பியதாக, பேசு தமிழா பேசு யூடியூப் சேனல் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கி இருக்கிறது.

நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டது:

புகார் அளித்தது தொடர்பாக ம.நீ.ம நிர்வாகிகள் விளக்கம்: