மார்ச் 29 (Cinema News): கல்கியின் (Kalki) சோழப்பேரரசு (Chozha Empire) நாவலை தழுவி மணிரத்னம் (Director Mani Rathnam) இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan). ஜெயம் ரவி, சியான் விக்ரம் (Chiyaan Vikram), பார்த்தீபன், ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai), விக்ரம் பிரபு, பிரபு, திரிஷா (Trisha), சரத் குமார் உட்பட பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி இந்திய அளவில் ஹிட் அடித்து இருந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் (Ponniyin Selvan 2) பாகம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 09:30 மணியளவில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!

படத்தின் முதல் பாகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராயுடன் திருப்புமுனை காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், சோழப்பேரரசின் நிலவிய பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.