Ponniyin Selvan 2 Poster (Photo Credit: Lyca Productions)

மார்ச் 17 (Cinema News): கடந்த 2022ம் ஆண்டு மணிரத்தினம் (Director Mani Rathnam) இயக்கத்தில், சியான் விக்ரம் (Vikram), திரிஷா (Trisha), ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பார்த்தீபன், சரத் குமார் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

சோழர்களின் (Chozha) ஆட்சிக்காலத்தை மையப்படுத்தி வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. IND Vs AUS: பந்துவீச்சில் மாஸ் சம்பவம் செய்த இந்தியா.. 188 ரன்களுடன் முதல் ஆட்டத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா.! நேரில் பார்த்து வியந்த ரஜினிகாந்த்.!

இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படத்தின் முதல் பாகத்தின் போதே படக்குழு அறிவித்துவிட்டது. அதற்கான பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், படம் ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தில் குந்தவை பிராட்டியாராக நடித்துள்ள திரிஷா - வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக் ஆகியோரின் காதல் பாடல் டீசர் 20ம் தேதி மாலை 6 மணியளவில் படக்குழுவால் வெளியிடப்படவுள்ளது.

🎤: @ShakthisreeG

✍🏻: @ilangokrishnan #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/jhJ0KLk0Pd

— Lyca Productions (@LycaProductions) March 17, 2023