செப்டம்பர் 11, சென்னை (Cinema News): நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், வசூல்-விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரூ.240 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், ரூ.590 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.700 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் ஸலாம் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்துள்ளார். Hawaii Kīlauea Volcano Eruption: மீண்டும் வெடிக்க தயாராகும் ஹவாய் எரிமலை?.. தண்ணீரை போல பீய்ச்சி அடிக்கப்படும் எரிமலைக்குழம்பு..!

அடுத்தடுத்து ரஜினிகாந்த் லைகா ப்ரொடெக்சன் தயாரிப்பிலும் நடிக்கவிருந்தார். இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இச்செய்தி அமைந்துள்ளது.

ரஜினியின் 171 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வழங்குகிறது. அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைக்கிறார்.

கே.ஜி.எப் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளை ஒருங்கிணைத்து வழங்கிய அன்பரீவ், இப்படத்திலும் சண்டை கலைஞராக பணியாற்ற ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.