Rajinikanth: உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரம்.. யார் இந்த ரஜினிகாந்த்.. வெற்றியின் மருவுருவமாய் சூப்பர்ஸ்டார்.!
Template: Tamil Actor SuperStar Rajinikanth

டிசம்பர், 9: கடந்த டிசம்பர் 12, 1950ல் ராமோஜி ராவ் கைக்வாட்டுக்கும் - ராமாபாய்க்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பதில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட் (Shivaji Rao Gaikwad). ராமோஜி ராவ் மராட்டிய மாநில காவல் துறையில் பணியாற்றுபவர். அவருக்கு தனது தாய் மண் மீது பற்று அதிகம் என்பதால், மராட்டிய மன்னரான சிவாஜியின் பெயரை மகனுக்கு சூட்டி அழகுபார்த்தார். கன்னடா & மராட்டிய மொழிபேசி வந்த சிவாஜி ராவ், தனது சிறுவயது முதலாகவே நடிப்பு மீது ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். அன்றைய நாட்களில் கன்னட திரையுலகில் கோலோச்சி இருந்த ராஜ்குமார், தமிழ் திரையுலகில் கோலோச்சி இருந்த எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்படங்களை தவிர்க்காமல் பார்த்து வந்துள்ளார்.

Rajinikanth
Rajinikanth

இளவயது கல்விக்கு பின்னர் பெங்களூர் மாநகராட்சி பேருந்து கழகத்தில் இணைந்து நடத்துனராகவும், அலுவலக உதவியாளராக, தச்சராக, மூடை தூக்கும் தொழிலாளியாகவும், நாடகங்களில் நடிக்கும் மேடை கலைஞராகவும் பணியாற்றிய சிவாஜிராவ் ஹைக்வாட், தனது நண்பரின் உந்துதலால் சென்னையில் இருக்கும் இயக்குனர் கே. பாலசந்தரின் பயிற்சி பட்டறையில் நடிப்பு பயின்றார். அதனைத்தொடர்ந்து, அவரால் ரஜினிகாந்த் (Rajinikanth) என பெயரிட்டு, அதனைத்தொடர்ந்து பின்னாட்களில் அதே பெயரால் பேசப்பட்டார். ஆம், இன்று நாம் பார்க்கவிருக்கும் மனிதர், திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரை வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், மூன்று முடிச்சு, 16 வயதினிலே திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். Fast Charging Mobile: சார்ஜ் ஏற்ற 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அசத்தல் ஸ்மார்ட்போன் எது?.. விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் லிஸ்ட் இதோ.! 

Rajinikanth 16 Vayathinile MovieFrom 16 Vayathinile Movie

அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், பின்னாளில் அவருக்கான வரவேற்பு காரணமாக நடிகர் என்ற நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வரவேற்கப்பட்டார். புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, ராகவேந்திரா, முத்து, அருணாச்சலம், வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன், பாட்ஷா, படையப்பா போன்ற பல மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த், பாபா படத்தில் அவரின் புகைபிடிக்கும் பழக்கத்திற்காக கடுமையாக எதிர்க்கப்பட்டார். அதனால் இப்படம் வெற்றிபெறாமல் பயங்கர தோல்வியை சந்தித்தது. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

Rajinikanth Shivanji EnthiranRajinikanth Shivanji  & Enthiran Movie

ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு பின்னர் அதிக சம்பளம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் அவர் இணைந்தார். எந்திரன் திரைப்படம் ரஜினிகாந்துக்கு உலகளாவிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அப்படத்திற்கு பின்னர் தற்போது வரை பல படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்தின் ராணா படம் வெளியாகும் என ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. ஆனால், கோச்சடையான் திரைப்படம் மிகப்பிரம்மாண்ட வரலாற்று நாவலாக எதிர்பார்க்கப்பட்டு, அது அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு தோல்வியை சந்தித்தது. இவர் தனது வாழ்நாட்களில் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்க மொழி, ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். Season Fever: புளூ காய்ச்சல் என்றால் என்ன?.. அதனை தவிர்ப்பது எப்படி..! இன்றே தெரிந்துகொள்ளுங்கள்..! 

Rajinikanth TamilnaduRajinikanth Tamilnadu

தமிழகத்தையே தனது நடிப்பாற்றலால் கட்டிப்போட்ட ரஜினிகாந்த், ஆரம்பகட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக தனது பல பிரச்சாரங்களை மேற்கொண்டார். பின்னர், தான் அரசியலுக்கு வருவதாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவித்து இருந்த நிலையில், இறுதியில் உடல்நலக்குறைவால் அம்முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அரசியலுக்கு வருகிறேன் என தனது ரசிகர் மன்றத்தினரை வைத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளை விறுவிறுப்புடன் நடத்தி அதில் இருந்து பின்வாங்கினார். அதனைப்போல, ஆன்மீக எண்ணம் கொண்ட ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலை சென்று வருவதும் வழக்கம். தனக்கு வாழ்வளித்த தமிழ் மக்களை என்றும் மறவேன் என்று இன்று வரை கூறிவரும் ரஜினிகாந்த், தனது வாழ்நாட்களில் பல சோதனைகளை கடந்து வெற்றி அடைந்து இன்று உலகளவில் கவனிக்கத்தக்க உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 03:59 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).