மார்ச் 03: ஒபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில், சிலம்பரசனின் அட்டகாமசான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பத்து தல. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள பத்து தல திரைப்படம், சிம்புவின் ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவை பார்க்க கே.ஜி.எப் திரைப்பட பாணியில் முழுக்க முழுக்க மாறுபட்ட கோணத்தில் மணல் கொள்ளைகள் தொடர்பான கதையம்சத்துடன் இருக்கும் என எதிர்க்கப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் 30ம் தேதி உலகளவில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!
பத்து தல படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், அருணாச்சலம், கலையரசன், சென்ட்ராயன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வழங்குகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல காரணங்களால் தள்ளிச்சென்ற நிலையில், தற்போது அனைத்து பணிகளும் நிறைவுபெற்று படம் வெளியீடுக்கு தயாராகிவிட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், டீசர் அதனை உறுதி செய்துள்ளது.
Watch Here Pathu Thala Movie Teaser From YouTube Here
Studio Green Tweet Simbu's Pathu Thala Teaser
Here's The Moment!
The Thundering arrival of #AGR
The power-packed #PathuThalaTeaser
is out now!
🔗https://t.co/VwwmtuRcMg#PathuThala #Atman #SilambarasanTR #PathuThalaFromMarch30
Worldwide #StudioGreen Release💥
— Studio Green (@StudioGreen2) March 3, 2023