Siragadikka Aasai Muthu (Photo Credit: Vijay Television)

செப்டம்பர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகுந்த பிரபலமானதாக இருந்து வருகிறது. எஸ். குமரன் இயக்கத்தில், இதுவரை 800 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில் முத்து, மீனா, விஜயா, ரோகினி ஆகிய கதாபாத்திரங்கள் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா, விஜய கதாபாத்திரத்தில் அணிலா ஸ்ரீகுமார், அண்ணாமலை கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் சௌந்தரராஜன் நடித்து வருகின்றனர். Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார்? எகிறும் எதிர்பார்ப்புகள்.! 

முத்து செய்தது என்ன?

இந்த தொடரில் முத்து கதாபாத்திரத்தில் மர்மம் ஒன்று இருப்பதாகவும், அவர் செய்யாத தவறுக்கு சிறுவயதில் சிறார் சிறைக்குச் சென்றதாகவும் சஸ்பென்ஸ் ஒன்று இருந்தது. இந்த உண்மை முத்து, அவரின் தந்தை அண்ணாமலை, முத்துவின் சகோதரர் மனோஜ் ஆகியோருக்கு தெரியும். மனோஜ் செய்த தவறுக்காக முத்துவின் மீது பழியை தூக்கிப்போட்டு மனோஜ் சிறுவயதில் இருந்தே தாயின் பாசத்தை நயவஞ்சக எண்ணத்துடன் பெற்றுக்கொள்ளும் நபராக இருந்துள்ளார். இந்த உண்மையை மீனா மனோஜுடன் கொண்ட சண்டைக்குப்பின்னர் முத்துவிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

ஜோதிடர் வார்த்தை விதியை மாற்றியதா?

முதற்கட்டமாக அம்மாவின் மீது அதிக அன்பு கொண்ட முத்துவின் வாழ்க்கையில் ஜோதிடர் விளையாடிய காட்சிகள் இன்று (செப் 13) ஒளிபரப்பாகிறது. அடுத்த வாரத்தில் முத்து ஏன் சிறைக்கு சென்றார் என்ற காட்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்த காட்சியை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது. இன்றளவில் எதற்கெடுத்தாலும் ஜோதிடம் என்ற விஷயத்தை நம்பும் நபர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மகனின் மீது நம்பிக்கை இல்லாமல் போலி ஜோதிடர் சொன்ன வார்த்தைகளை கேட்டு நடந்த விஜயா தனது வாழ்க்கையில் சந்தித்த திருப்பம் என்ன? அவரை நயவஞ்சக எண்ணத்துடன் ஏமாற்றிய மனோஜ் குறித்த உண்மை எப்போது வெளிப்படும்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ நாளை வெளியாகும்.