Pen Gift to Actor Vijay (Photo Credit: @TVKVijayTrends X)

பிப்ரவரி 08, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக மக்களுக்கு தொண்டாற்ற எண்ணி, அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறார். இறுதியாக அரசியல் பயணத்திற்கு முன்னர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். பெங்களூரை தலைமையிடமாக கொண்ட கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் உட்பட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் கலந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. Vidaamuyarchi Box Office Collection: பத்மபூஷன் அஜித்தின் 'விடாமுயற்சி'.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?! 

தளபதிக்கு கிப்ட்:

இந்நிலையில், பள்ளி மாணவியான ரசிகை ஒருவர், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தங்க பேனா ஒன்றை பரிசாக அளித்தததாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தளபதி 69 படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில், நடிகர் விஜய்க்கு மாணவி பரிசு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜனநாயகனுக்கு பேனா பரிசு கொடுத்து மகிழ்ந்த பள்ளி மாணவி:

மற்றொரு கோணத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி: