Chain Snatching Robbers Died in Encounter (Photo Credit: @nakkheeranweb X)

மார்ச் 26, சென்னை (Chennai News): சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை 7 இடங்களில் நகை பறிப்பு (Chains Snatched In Chennai) சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் (வயது 26) என்பவரை கைது செய்து, அழைத்து சென்றபோது, காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயற்சித்துள்ளார். தரமணி ரயில்நிலையம் அருகில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது, அவர் உயிரிழந்தார். மேலும், சென்னையில் நேற்று காலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு, பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிய சல்மான் என்பவர், நேற்று மாலை நெல்லூர் அருகே சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். சென்னை அழைத்துவந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!

கொள்ளையன் என்கவுண்டரில் பலி:

இதுகுறித்த விசாரணையில், ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. மேலும், 2021இல் மராட்டிய காவல்துறையினரால் தேடப்பட்ட செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையர்களில் முக்கியமானவர் ஆவார். பலியான ஜாபர் குலாம் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனா். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் காவல்துறையினர் கைது செய்தனா்.