Jana Nayagan (Photo Credit: @KVNProductions X)

ஜனவரி 26, சென்னை (Cinema News): கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் (KVN Productions) தயாரிப்பில், சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை ஆகிய படங்களை இயக்கி வழங்கிய எச். வினோத் (H Vinoth) இயக்கத்தில், நடிகர்கள் விஜய், பூஜா ஹெட்ஜ், பாபி டியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, வரலட்சுமி சரத் குமார் உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69 (Thalapathy 69). அனிரூத் ரவிச்சந்தர் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் எடிட்டிங்கில் உருவாகி இருக்கும் திரைப்படம், ரூ.300 கோடி செலவில் தயாராகி வருகிறது. Padma Bhushan for Ajith Kumar: அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; துள்ளல் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.! 

படத்தின் பெயர் அறிவிப்பு:

அரசியல் ரீதியாக கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஜனநாயகன் (Jana Nayagan) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க முடிவெடுத்து, 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னதாக 2 படங்களில் அவர் இறுதியாக நடிப்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து தி கோட் (The GOAT) திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை அடைந்தது. இந்நிலையில், இன்று 69 வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, எச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்கும் விஜயின் படத்திற்கு ஜன நாயகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜனநாயகம் படத்தின் முதல்பார்வை மற்றும் படத்தலைப்பு அறிவிப்பு: