ஜூலை 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தமிழ் திரையுலகில் நிகழும் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
நேற்று முடிந்த திருமணம் :
இவருக்கு முன்னதாகவே திருமணம் முடிந்த நிலையில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதனிடையே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படத்தை நேற்று ஜோய் கிரிசில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். Health Tips: பெண்களே.. தினமும் நீண்ட நேரம் சமையல் செய்றீங்களா?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!
கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த ஜோய் கிரிசில்டா :
இந்த நிலையில் தங்களது திருமண கோலத்தில் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை இன்று பகிர்ந்த அவர், '6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.. பேபி லோடிங் 2025..' என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேற்று தான் திருமணம் முடிந்தது.. இன்று ஆறு மாத கர்ப்பமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருமணம் குறித்த அப்டேட் :
Mr & Mrs Rangaraj #madhampattyrangaraj ❤️ pic.twitter.com/kRSWAvbZ5n
— Joy Crizildaa (@joy_stylist) July 26, 2025
6 மாத கர்ப்பம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஜோய் கிரிசில்டா :
Baby loading 2025🤰
We are pregnant 🤰
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ
— Joy Crizildaa (@joy_stylist) July 27, 2025