மார்ச் 30, சென்னை (Cinema News): பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் (Sardar). கார்த்திக், ராஷி கண்ணா (Rashi Khanna) உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம், உளவுத்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியது. வணிக அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த திரைப்படத்தின், இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாகும் என அறிவிப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.
சர்தார் 2 அப்டேட் (Sardar 2 Update):
இந்நிலையில், சர்தார் 2 படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் உளவுத்துறை அதிகாரி குற்றங்கள் செய்வது போல காண்பிக்கப்பட்ட நிலையில், அவரை நம்பிக்கை துரோகம் செய்து, இந்திய தேசத்துக்கு எதிராக இருக்கும் அதிகாரி யார்? வில்லனை நாயகன் பழிவாங்கினாரா? நாட்டுக்காக உளவுத்துறை அதிகாரியாக அவர் இழந்தவை என்ன? என்பதை விவரிக்கும் வகையில் இரண்டாவது பாகம் தயாராகி இருக்கிறது. Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகையின் தனிமை காட்சிகள் லீக்? நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விடைதரும் இரண்டாவது பாகம்:
உளவுத்துறையை பொறுத்தவரையில் ஒருமுறை அவர்கள் உளவுத்துறை பிரிவில் இணைந்துவிட்டால், அவர்களின் வாழ்க்கையே உளவுத்துறையாக மாறிவிடும். எதிரிகளை கண்காணிப்பது, அவர்களுடன் பயணிப்பது, சட்டவிரோத செயல்கள் குறித்து அரசுக்கு தகவல் கொடுப்பது, தன்னையும் பாதுகாப்பது, அரசாங்கத்தின் ரகசியங்களை காப்பது என தேசத்துக்காக உளவுத்துறை அதிகாரிகள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்பணிக்கின்றனர். அதனாலேயே நாம் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விலகி இருக்கிறோம்.
சர்தார் 2 படக்குழு:
சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை பொறுத்தமட்டில், நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன், யோகி பாபு, ரஜிஸா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. விரைவில் வெளியாகவுள்ள படத்தின் முதல் பார்வை தொடர்பான அப்டேட் நாளை வெளியாகியது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை படத்தின் அப்டேட் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.