ஜனவரி 07, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 92 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Pushpa 2 Stampede: புஷ்பா 2 நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவன்.. மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட அல்லு அர்ஜுன்.!

மீண்டும் என்ட்ரி ஆன அர்ணவ்:

கடந்த வாரத்தில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதில் ரயான் வெற்றி பெற்றிருக்கிறார். அவர்தான் நேரடியாக பைனலுக்கு போகும் முதல் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார். நேற்று (ஜனவரி 6) வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஜனவரி 7) வெளியான முதல் புரோமோவில் சுனிதா, வர்ஷினி இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் 2வது புரோமோவில் அர்ணவ் உள்ளே சென்றிருக்கிறார். வீட்டிற்குள் நுழைந்த உடன் ஜெஃப்ரி எங்கே என்று கேட்கிறார் அர்ணவ். அதற்கு, "வெளியே இருந்து நீங்க நிறைய பார்த்திட்டு வந்திருப்பீங்க; ஆனா அதை இங்க பேசாதீங்க" என்று ஜாக்குலின் சொல்ல, அர்ணவ் "எனக்குப் பேச எல்லா உரிமையும் இருக்கிறது" என்கிறார். "ஜெஃப்ரி பண்ணத கேட்கல. நான் பேசுறத மட்டும் எல்லோரும் தட்டி கேப்பீங்களோ" என்று அர்ணவ் கோபப்படுகிறார்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: