![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Yash-19-Movie-Poster-Photo-Credit-YouTube-380x214.jpg)
நவம்பர் 08, பெங்களூர் (Bangalore): கன்னட திரையுலகில் வெளியான பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம்வந்தவர் யாஷ் (Yash). இவர் கே.ஜி.எப் படத்திற்கு பின்னர் ரசிகர்களால் ராக்கிங் ஸ்டார் யாஷ் என்று அழைக்கப்படுகிறார்.
கே.ஜி.எப் மாபெரும் சாதனை: கன்னட திரைப்படங்களின் மீது கே.ஜி.எப் படம் வெளியாகுவதற்கு முன்பு வரை பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான கே.ஜி.எப் படம் விமர்சனங்களை சுக்குநூறாக அடித்து நொறுக்கியது.
அடுத்தடுத்த பாகங்கள்: இப்படத்தின் வெற்றி இந்திய அளவில் மிகப்பெரியதாக பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பல எதிர்பார்ப்புகளுடன் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று, வசூலை வாரிக்குவித்தது. இதனைத்தொடர்ந்து, கே.ஜி.எப் படத்தின் முன்றாம் பாகமும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bipin Rawat Sand Art: மறக்க முடியுமா?.. முப்படைகளின் முதல் தலைமைதளபதி பிபின் ராவத் மறைந்த தினம் இன்று: உருவத்தை அழகுற செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர்.!
யாஷ் 19 அறிவிப்பு: இந்நிலையில், யாஷின் 19வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட் கே நாராயணாவின் கே.வி.என் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில், யாஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டாக்சிக் (Toxic) என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்புடன், பெரியவர்களுக்கான விசித்திர கதை என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது.
10- 04- 2025 அன்று வெளியீடு: படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கி வழங்குகிறார். படத்தின் இசையமைப்பாளர் மற்றும் பிற விபரங்கள் ஏதும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் வெளியீடு தேதி 10 ஏப்ரல் 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமும் உலகளவில் வெளியிடும் தரத்துடன் எடுக்கப்படவுள்ளது.
மலையாள திரைப்பட நடிகை & இயக்குனர்: பெண் இயக்குனர் கீது மோகத்தால் தாஸ் மலையாள திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். இவர் மலையாளத்தில் கேட்குன்னுண்டோ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். Liar's Dice என்ற ஹிந்தி படத்தையும், மவுட்டன் என்ற மலையாள படத்தையும் இயக்கி இருக்கிறார். இவருடன் தற்போது யாஷ் படத்தில் நடிக்க இணைந்துள்ளார்.