ஜனவரி 26: சாருகேசி நாடகத்தை (Charukeshi Drama) திரைப்படமாக எடுக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ள ஒய்.ஜி மகேந்திரன் (Y.Gee Mahendra), நேற்று நடிகர் ரஜினிகாந்தை (Rajinikanth) வைத்து அதன் முதற்கட்ட பணிகளை தொடங்கினார். அந்நிகழ்ச்சி சென்னையில் (Chennai) உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. அப்போது, சாருகேசி நாடகத்தின் 50 வது காட்சி ரஜினிகாந்த் முன் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை அவர் கண்டுகளித்தார்.
ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) குறித்து பேசுகையில், "சூப்பர்ஸ்டார் அவர் தான். வேறு யாரும் இல்லை. காரணம் ஒரே மக்கள் திலகம் தான், நடிகர் திலகம் தான், மெல்லிசை மன்னர் தான், கவி கண்ணதாசன் தான், ரஜினிகாந்த் ஒருவரே சூப்பர்ஸ்டார். உங்களுக்கு தெரியாத பட்டம் அவருக்கு உள்ளது. Surya Jyothika Met With Prithviraj: தனது கணவருடன் நண்பர் பிரித்வி ராஜை நேரில் சந்தித்த ஜோதிகா.. ட்ரெண்டிங்காகும் போட்டோ..!
சென்னை வாணி மஹாலில் இன்று மாலை நடைபெற்ற Y.G.மகேந்திரன் மற்றும் UAA யின் சாருகேசி எனும் 50வது நாடக காட்சியை தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் கண்டுகளித்து சிறப்புரையாற்றினார்.#Thalaivar @rajinikanth#Charukeshi #VaniMahal pic.twitter.com/g9EHjHgfru
— Sholinghur N Ravi (@SholinghurRavi) January 26, 2023
அதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர் எதற்காக சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவரின் படங்கள் நன்றாக ஓடியதால் சூப்பர்ஸ்டார் ஆனாரா?. அவர் ஒரு Super Human Being.. அவருக்குள் அற்புதமான மனிதர் இருக்கிறார். அதனாலேயே அவர் சூப்பர்ஸ்டார். நான் அவரை நேராக கூட விழாவுக்கு அழைக்கவில்லை.
போனில் தொடர்பு கொண்டு நிகழ்வை கூறினேன். எத்தனை மணிக்கு வரவேண்டும்? என கேட்டு இங்கு வந்துள்ளார். வேறு எந்த நடிகரும் இப்படி செயல்படமாட்டார். அவருக்குள் இருக்கும் மனிதமே சூப்பர்ஸ்டார்" என்று பேசினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் பலரும் தங்களின் ஆரவாரத்தை எழுப்பி மகிழ்ந்தனர்.