ஆகஸ்ட் 13, வாரணாசி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் (Varanasi) தனது தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்படும் 10 வயது சிறுவன் சூரஜ், கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஃபைசான், காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சிறுவன் சூரஜ் தாய் சோனா சர்மாவின் வீட்டிற்கு ஃபைசான் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, தன் தாயும் ஃபைசானும் நெருக்கமாக இருப்பதைச் சூரஜ் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃபைசான், சூரஜை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்ததால் தந்தை கத்தியால் குத்திக்கொலை.. மகன் வெறிச்செயல்..!
வாலிபர் என்கவுண்டரில் பலி:
இச்சம்பவத்திற்குப் பிறகு ஃபைசான் மற்றும் அவனது நண்பன் ரஷீத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஃபைசான் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை:
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் காணாமல் போன தன் மகனை சோனா தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். ஃபைசான்தான் தன் மகனைக் கொலை (Murder) செய்தார் என்பது சோனாவுக்குத் தெரியாது என்றும் காவல் துறை துணை ஆணையர் காஷி கௌரவ் பன்சால் தெரிவித்துள்ளார். மேலும், சோனாவின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். கணவரின் மரணத்திற்குப் பிறகு சோனா, ஃபைசானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, சோனாவின் கணவரின் மரணத்திற்கும் இச்சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், சோனாவிற்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.