Knife (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 13, தியோரியா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், தியோரியா (Deoria) மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், 25 வயதான மகன் தனது 45 வயது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 12) மாலை நடந்துள்ளது. பப்ஸ் பிரியர்களே உஷார்.. பப்ஸ்க்குள் பாம்பை பொரித்து அனுப்பிய பேக்கரி.. அதிர்ச்சி வீடியோ.!

தந்தை கத்தியால் குத்திக் கொலை:

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், லார் நகரைச் சேர்ந்த ரவி (வயது 25), தனது தந்தை சந்தன் சவுகானிடம் (வயது 45) வேலைச் செலவுகளுக்காக பணம் கேட்டுள்ளார். தந்தை சவுகான் பணம் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ரவி தனது தந்தையின் வயிற்றில் கத்தியால் (Murder) குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் கைது:

இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் ரவியைக் கைது செய்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்த சவுகானின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.