மே 12, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர்-பலோடா பஜார் (Raipur-Balodabazar Road) சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அதில், பங்கேற்று விட்டு மினி லாரியில், வீடு திரும்பி கொண்டிருந்தனர். மினி லாரியில் சுமார் 50 பேர் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் (Accident) மோதியது. இதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். Trending Video: கண்ணீருடன் கணவரை இராணுவத்துக்கு அனுப்பி வைத்த மனைவி.!
கோர விபத்து:
விபத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.