
மே 13, சண்டிகர் (Punjab News): பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் (Amritsar) மாவட்டத்தில் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக, கள்ளச்சாராயம் (Illicit Alcohol) விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பராப்ஜீத் சிங் என்ற நபர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. Trending Video: தாமதமான மின்சார ரயில்.. படிக்கட்டில் தொங்கியபடி பெண்கள் ஆபத்து பயணம்.!!
14 பேர் பலி:
இதுகுறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு (மே 12) எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நாங்கள் மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அப்போது 6 பேர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அவர் கூறினார்.