மே 12, மும்பை (Mumbai News): சமீப காலமாகவே மும்பை லோக்கல் ரயில்கள் தாமதமாக வருவதால், பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி பயணிகள் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை கல்யாண்-சிஎஸ்டி இடையே இயக்கப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் தாமதமானதால் பெண்கள் ரயிலின் வெளிப்புற படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மும்பை ரயில்வே யூசர்ஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள் "பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொங்கியபடி பயணம் செய்த பெண்கள் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)