ஆகஸ்ட் 09, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூர், கும்பரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் நாகபிரசாத் (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ஷில்பா. இவர் தனது கணவரை பிரிந்து, 14 வயதுடைய மகனுடன் வசித்து வருகிறார். தற்போது 14 வயதுடைய சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக சிறுவன் அமோகா கீர்த்தி தனது மாமாவான நாகபிரசாத்தின் பராமரிப்பில் இருக்கிறார். நாகபிரசாத் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன், ஐபோன் செல்போனை வைத்துக்கொண்டு எந்த நேரமும் ஆன்லைனில் பிரீ பயர் கேம் விளையாடி வந்ததாக தெரிய வருகிறது. மேலும், தனது மாமாவிடம் கேம் விளையாட பணம் வேண்டும் என அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ICICI Bank Minimum Deposit: மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000/- ஐசிஐசிஐ வங்கி பயனாளர்கள் தலையில் பேரிடி.!
தொந்தரவு செய்ததால் கொடூர கொலை:
இந்நிலையில், சம்பவத்தன்று ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்ட சிறுவனுக்கும், அவரது மாமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொறுமையை இழந்து ஆத்திரமடைந்த நாகபிரசாத், சிறுவனின் வாயை துணியால் பொத்தி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதை உணர்ந்தவர், வீட்டை பூட்டிவிட்டு கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார். 3 நாட்கள் தாக்குப் பிடித்த நிலையில், கையில் இருந்த பணம் அனைத்தும் செலவானதால் அங்குள்ள சோழதேவனஅள்ளி காவல் நிலையத்தில் சென்று விஷயத்தை கூறி சாரணைந்தார். இவர் கொடுத்த தகவலின் பெயரில் அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இது குறித்து வழக்கப்பதிவு செய்து நடந்த விசாரணையில், சிறுவன் ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.