15 Month Old Baby Beaten By Care Taker Shocking Video Surfaces (Photo Credit : @Rrajora07 / @AbhishekUpadhy6 X)

ஆகஸ்ட் 13, நொய்டா (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருவோர் தினமும் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றால் பின் மாலை தான் வீடு திரும்புவார்கள். இதனால் அவர்களின் பச்சிளம் குழந்தைகளை கவனித்துக் கொள்ள கேர் டேக்கர் எனப்படும் குழந்தை பராமரிப்பு மையங்களின் உதவியையும் நாடுகின்றனர்.

15 மாத குழந்தையை தாக்கிய கேர் டேக்கர் :

இவ்வாறான பணியில் இருப்போர் குழந்தைகளை அன்றைய நாள் முழுவதும் பத்திரமாக கவனித்துக் கொள்கின்றனர். இதற்காக கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறான கேர் டேக்கர் மையங்களில் சிறு குழந்தைகளை முறையாக கையாளத் தெரியாதவர்கள் அவர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வும் அதிகம் நடந்து வருகிறது. இதனிடையே நொய்டாவை சேர்ந்த தம்பதியின் 15 மாத பெண் குழந்தையை பராமரிப்பாளர் கடுமையாக கிள்ளி வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.! 

சிசிடிவி கேமராவில் பகீர் :

கடந்த சில மாதங்களாக பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருக்கும் குழந்தையை சமீபத்தில் பெற்றோர் கவனித்தபோது உடலில் ஆங்காங்கே தழும்புகள் இருந்துள்ளன. இதனால் குழந்தைக்கு ஏதேனும் சிறு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோர் அலட்சியமாக இருந்துள்ளனர். பின் இது தொடர்ந்து வந்த நிலையில், பராமரிப்பு நிலையத்தில் இருந்த கேமராவை பெற்றோர் சோதித்துள்ளனர்.

குழந்தை மருத்துவமனையில் அனுமதி :

அச்சமயம் பெண் குழந்தையை பராமரித்து வந்த பெண் பராமரிப்பாளர் குழந்தையை கடுமையாக கிள்ளுவதும், தாக்குவதுமான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனை கண்டு அதிர்ந்த பெற்றோர் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி செய்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை அழுததால் ஆத்திரத்தில் தாக்கியதாக பெண்மணி வாக்குமூலம் :

இது குறித்து பெண் முதற்கட்டமாக தெரிவித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சம்பவத்தன்று பெற்றோர் விட்டுச் சென்ற பின்னர் அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. இதனால் ஆத்திரத்தில் கடுமையாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். பராமரிப்பாளர் குழந்தையை கிள்ளியும், பேட்டால் அடித்தும் கொடுமை செய்தது பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

கேர் டேக்கர் பெண்மணி 15 மாத குழந்தையை சுவற்றில் முட்டி கடுமையாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ :