Couple Sona & Ramiz (Photo Credit: @TheSouthFirst / @mishrag47 X)

ஆகஸ்ட் 12, எர்ணாகுளம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சோனா எல்டோஸ் (வயது 23). இவர் ஆசிரியர் பயிற்சி மாணவி ஆவார். அதே பகுதியை சார்ந்தவர் ரமீஸ். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரமீஸ் மற்றும் அவரது உறவினர்கள் சோனாவை இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டுமென கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். Death Note: டெத் நோட் அனிமே பார்த்து நரகத்திற்கு செல்வதாக 7 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பெற்றோர்களே கவனம்.! 

கடிதம் எழுதி வைத்து தற்கொலை:

இந்த நிலையில், உயிருக்கு உயிராக காதலித்த காதலன் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துகிறார் என வருத்தமடைந்த சோனா கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலைக்கு முன்னதாக ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், "காதலன் ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என்னை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர். மதம் மாற வேண்டி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணை:

இதனை அடுத்து கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விஷயம் குறித்து மகளைப் பறிகொடுத்த சோனாவின் தாய் கூறுகையில், "எனது மகள் சோனா ரமீஸ் மீது அதிக நேசம் கொண்டிருந்தார். அதற்காக மதம் மாறவும் அவர் ஒரு கட்டத்தில் சம்மதித்தார். ஆனால் ரமீஸ் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மதமாற்றம் மற்றும் திருமண விஷயத்தில் தயக்கம் காட்டிய நிலையில், ரமீஸ் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் அவர் விபரீத முடிவு எடுத்து விட்டார்" என்று தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3