ஏப்ரல் 20, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதற்காக பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். Laptop On Lap: மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? விவரம் உள்ளே..!

இதனையடுத்து, பெதுல் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் (Election Duty) முடிவடைந்த நிலையில், ஊர்க்காவல்படையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் உட்பட 40 பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பேருந்து போபால்-பெதுல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் குறுக்கே லாரி ஒன்று வந்தது. இதனால், லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை திருப்ப முயலும்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் 21 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.