Laptop (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 20, சென்னை (Technology News): நாம் பெரும்பாலும் மடிக்கணினியை மடியில் (Laptop) வைத்துதான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், நமக்கு பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அவற்றில் இருந்து விடுபட மேற்கொள்ளவேண்டியவைகளை இதில் பார்ப்போம். Medicinal Properties Of Gourd: கோவக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பதால் நம் உடலுக்கு நிச்சயமாக பலவிதமான நோய்கள் வர நேரிடும். மடிக்கணினியில் இருந்து வெளியேறும் சூடான காற்று, நம்முடைய தோலில் எரிச்சலை உண்டாக்கும். இது டோஸ்டட்ஸ்கின் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்களுக்கு விந்தனுக்களின் எண்ணிக்கையையும், அதன் தரத்தையும் குறைக்கிறது.

மேலும், இதனை மடியில் வைத்து பயன்படுத்துவதும், தவறான முறையில் அமர்ந்து உபயோகிப்பதும் முதுகுவலியை உண்டாக்கும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால், அனைவரும் மேசையில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்துவதே சிறந்ததாகும். சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், மடிக்கணினி சூடாகும் தன்மை சிறிது நேரம் குறைவதோடு, நம் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும். இதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.