குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி.. சோக சம்பவம்..!

கேரளாவில் குளத்து நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி.. சோக சம்பவம்..!
Water Death (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 30, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், பாலக்காடு (Palakkad) மாவட்டத்தில் கரிம்பா மூன்னேக்கர் துடிக்கோடு வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதி பிரகாசன் - அனிதா. பிரகாசன், இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தம்பதிக்கு ராதிகா (வயது 10) என்ற ஒரு மகளும், பிரதீப் (வயது 7), பிரதீஷ் (வயது 4) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். கோயில் சுவர் இடிந்து விபத்து.. பக்தர்கள் 9 பேர் பரிதாப பலி..!

குளத்தில் மூழ்கி பலி:

இவர்கள் 3 பேரும், நேற்று (ஏப்ரல் 29) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூவரையும் நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். பின், வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் குழந்தைகளின் காலணிகள் கிடப்பதை பார்த்தனர். இதனையடுத்து, குளத்தினுள் இறங்கி தேடியதில், குழந்தைகளின் உடல் சடலமாக (Child Death) மீட்கப்பட்டனர்.

சோக சம்பவம்:

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).